செக்கடி சுடலைமாடன் சுவாமி வரலாறு

 

 

செக்கடி சுடலைமாடன்

திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் குடியிருப்பு காலங்கரையான் சுடலை மாடசாமி.!!

( வரலாறு ) சத்திரம் குடியிருப்பு இருந்து வாழ்ந்து வந்த வாணிய செட்டியார் சமுதாயத்தில் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள் கைலாசம் செட்டியார் பலவே செட்டியார் அண்ணன் தம்பி இருவரும் நஞ்சை பூஞ்சை உடன் வாழ்ந்து வந்தார்கள் மேலும் சத்திரம் குடியிருப்பு பழைய பிள்ளையார் கோவில் தெருவில் யாதவர் குலத்தை சேர்ந்த சுடலை முத்து யாதவ் சுப்பு யாதவ் இருவரும் அண்ணண் தம்பி யாக சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள் மாடசாமி செட்டியார் கைலாசம் செட்டியார் இருவரும் நமக்கு நல்ல வசதி இருக்கிறது அதனால் நம் குல தொழில் எண்ணெய் வியாபரம் செய்வதற்கு முடிவு எடுத்தார்கள் இந்த எண்ணெய் வியாபரம் செய்வதற்கு கல் செக்கு தேவைபட்டது மேற்கண்ட விவரத்தை சுடலைமுத்து யாதவ் சுப்பு யாதவ் ஆகிய இருவரிடத்தில் தெரியப்படுத்தினர்கள் மேற்கண்ட குடும்பங்கள் நல்ல ஒற்றுமை யாக வாழ்ந்து வந்தார்கள் பின்பு கல் செக்கு அடிப்பற்கு கங்கை கொண்டான் பக்கத்தில் இருக்கும் பருத்திகுளம் ஊருக்கு சென்று கல் செக்கு அடிக்கும் ஆசாரியிடம் கல் செக்கு அடிபதற்கு ஏற்பாடு செய்தார் கள் கல் செக்கு வேலை முடிந்தவுடன் சுடலை முத்து யாதவ் வீட்டில் இருந்து மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கல்  செக்கு எடுக்க பருத்தி குளத்திற்கு சென்றார்கள் கல் செக்கு வண்டியில் ஏற்றுவதற்கு முறைபடி பூஜை செய்தார் கள் பருத்தி குளத்தில் இருந்து வண்டி செக்கை ஏற்றி வந்தது மாலை நேரத்தில் கங்கை கொண்டான் சிற்றாற்றில் மாட்டு வண்டி வந்து அடைந்தாது செட்டியார்களும் யாதவர்களும் ஆற்றில் குளித்து விட்டு ஆனந்த வள்ளி அம்மானை வணங்கி உணவு அருந்தி ஒய்வு எடுத்தார்கள்பொழுது அடைவதற்கு முன் கல் செக்கு மாட்டு வண்டி புறப்பட்டது ராஜாபதி கங்கை கொண்டான் குளத்தில் மத்தியில் யாதவ குல தெய்வம் ஆன காலங்கரையான் சுடலை மாடசாமி கோயிலுக்கு எதிரே வண்டி நின்றது வண்டி  தன்னால் நின்ற வுடன் செட்டியார் கள் கவலை பட்டு வண்டியை சுற்றிப்பார்த்தனர் வண்டியில் எவ்வித கோளாரும் இல்லை இவர்களுக்கு என்ன செய்வதொன்று புரிய வில்லை கங்கை கொண்டான் மக்கள் மாட்டுவண்டி செல்ல வேண்டும் என்றால் காலங்கரையான் சுடலை மாடசாமி க்கு தேங்காய் விடலையும் கணிக்கையும் செலுத்தி செல்லுமாறு கூறினார்கள் உடனே நான்கு பேரும் கணிக்கை செலுத்தி கருத்தபாண்டி காலங்கரையான் சுடலை மாடசாமி வணங்கினார் ராஜாபதி கங்கை கொண்டான் ஊரில் இருந்து ஆடுகள் மாடுகள் வாங்கி செல்ல வேண்டும் என்றால் காலங்கரையான் சுடலைக்கு கணிக்கை செலுத்தவேண்டும் செட்டியார் இரு குடும்பத்திலும் காலங்கரையான் நிலையம் வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் அது போல வண்டி எடுத்து வந்த சுடலைமுத்து யாதவ் சுப்பு யாதவ் இருவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவார்கள் அவர்கள் இடத்திலும் நிலையம் வாங்க என்று நினைத்தார் உடனே காலங்கரையான் சுடலை மாடசாமி இவர்கள் தாய்யான பாதாளகரண்டி அம்மா மற்றும் 21பந்தி தேவதைகளுடன் கல் செக்கு வண்டியை பின் வந்தது கைலாசம் செட்டியருக்கும் மாடசாமி செட்டியருக்கும் சந்தோஷம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் 21 பந்தி  தெய்வங்கள் வண்டிபின் வருவது தெரியது வண்டி மதுரை ரேட்டில் வேகமாக பாண்டாரம் குளம் வாழியாக குறுக்கு பாதையில் யாதவ் ஆட்டுமந்தையில் அவரை இலை திடல் பக்கத்தில் வண்டி நின்று விட்டது இந்த ஆட்டு மந்தை சுடலைமுத்து யாதவ் சுப்பு யாதவ் க்கு உரியதாகும் வண்டி நின்றவுடன் காலங்கரையான் சுடலைமாடசாமி ஆட்டு மந்தை பார்த்தவூடன் முதலிலல் நிலையம் வாங்க வேண்டும் நினைத்தார் மீண்டும் கல் செக்கு வண்டி அசைய வில்லை உடனே கைலாசம் செட்டியார் காலங்கரையான் சுடலையை மனதில் என்னி தேங்காய் உடைத்து வணங்கினார் பின்பு  வண்டி புறப்பட்டாது கல்செக்கு நிறுத்த வேண்டிய இடத்தில் பூஜைகள் செய்து நிறுத்தினார்கள் எண்ணெய் எடுப்பதற்கு செக்கை ஒட்டினார்கள் எண்ணெய் எடுக்க முடியவில்லை ஆனால் செக்கில் எந்த. குறைபாடும் இல்லை ஆனால் எண்ணெய் எடுக்கமுடியவில்லை என்று மனம் வருந்தினார் உடனே 21பந்நி தெய்வமான காலங்கரையான் சுடலைமாடசாமி வெள்ளி செவ்வாய் கிழமையில் செட்டியார்கள் .யாதவ் கள் வீட்டிலும்  சாமி குரல் கொடுக்க இருவரும் குறி கேட்க்க மணப்படைவீடு  சென்று வள்ளி குறத்தியிடம் கூறி கேட்கும் போழுது கங்கை கொண்டான் ராஜாபதி காலங்கரையான் செக்குடன் வந்து விட்டார்கள் இதனால் செக்கில் எண்ணெய் எடுக்க முடியாது ஆட்டு மந்தையில் வெள்ளி செவ்வாய் குரல் கேட்க்க இதுதான் என்று குறத்தி கூறினால் உடனே சுடலைமுத்து யாதவ். சுப்பு யாதவ் இருவரும் காலங்கரையான் சுடலைமாடசாமிக்கு  தாழையூத்து சத்திரம் குடியிருப்பு இரயில்வே கேட் மேல் புறத்தில் உள்ள ஆட்டு மந்தையில் காலங்கரையான் சுடலை என்று யாதவர்கள் நிலையம் போட்டனார்
கைலாசம் செட்டியரும் மாடசாமி செட்டியரும் அந்த செக்கை கொண்டு ரயில்வே கேட் கிழ்புரத்தில் பழைய பஞ்சத்து அலுவலகத்திற்கு எதிரில் செக்கை கொண்டு வைத்தனார் அங்கு செட்டி மார்கள் செக்கில் வந்தால் செக்கடி சுடலைமாடசாமி என்று நிலையம் போட்டனார்….

பதிவு…

J.K.சந்தோஷ் செட்டியார் BE.,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

srilanka chettiar caste|இலங்கையில் முக்கிய பங்கு வகிக்கும் செட்டியார்கள்|srilanka tamilan|chetty

vellan chettiar history |வெள்ளாஞ்செட்டியார் வரலாறு| வெள்ளாஞ்செட்டியார் உட்பிரிவு எத்தனை தெரியுமா?||

இந்தியாவிலேயே முதன்முதலில் விமானம் வைத்து இருந்தவர் ஒரு தமிழர் அவர் யார் தெரியுமா?|செட்டிநாடு||✈